பல ஆண்டுகளாக பற்றாக்குறை நிலையிலேயே காலத்தை ஓட்டியாயிற்று. அந்நிலையைத் தொடர விடுவது நல்லதல்ல. அதனால் உதவித் தொகைகளைக் குறைத்து விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.
புத்ரா ஜெயாவில், பொருளாதார உருமாற்றத் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில் பேசிய அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட் இவ்வாறு கூறினார்.
“எதுவும் செய்யவில்லை என்றால், நாடு எதிர்காலத்தில் கடும் பிரச்னைகளை எதிர்நோக்கும்”, என்றாரவர்.
அரசாங்கம்: விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை- ! ஆமாம் அரசாங்கம் சொல்வதில் எந்த தப்பும் இல்லை !? BRIM 500 வெள்ளிய வாங்கிகிட்டு நல்லாவே ஏப்பம் விட்ட மக்களுக்கு அப்படிதான் வேணும் .அரசாங்க BRIM குடுக்கிறான் என்று நம்பி வரிசையிலே நின்னு பணத்தை வாங்கிநேங்க்களே ,இப்ப விலை வாசி ஏறும்போது ,குத்துது கொடையுதா!!!!!
அரசு புரியும் ஊதாரித்தனம், ‘ஓட்டைகள்’ வழி வரிப்பணம் ஒழுகுதல், ஆடம்பர மோகத் திட்டங்கள், ஊழல்கள், பணவிரயம், குரோநிகளுக்குக் காட்டும் சலுகைகள், வீண்-விரய நடவடிக்கைகள் (எகா: kidmat negara etc), போன்றவைகளில் கை வைத்தாலே போதும்….., மக்கள் தலையில் கைவைக்கத் தேவையே இல்லை. உருப்படியானதை செய்யாமல் உதவாக்கரை செயலில் மன்னர்களாக இருக்கிறீர்களே…!!!! நீங்களெல்லாம் தலைவர்களாய் வந்து ஏழை எங்களை ஒழுங்கா தூங்க விட மாட்டீர்கள் போல் இருக்கு. ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன்…, இந்த DEVAN SENAT எதற்கு?! அதை உடனே இழுத்து மூடினாலே வருசத்துக்கு எவ்வளோவோ மிஞ்சுமே…! ஊதாரியான உங்களுக்கு இந்தக் கணக்கு எல்லாம் எங்கே புரிய போவுது…?
எல்லாவற்றையும் கொள்ளை அடித்தபின் மக்களின் வயிற்றில் அடிக்கத்தொடங்கியாச்சு. 56 வருடங்கள் அம்னோ ஆட்சி லட்சணம்.
ஆமாம் கண்டிப்பாக விலைவாசி , வீட்டு வரி , சாலை வரி , நிலவரி இன்னும் எது வெல்லாம் ஏத்த நினக்கிறிங்க்களோ அத்தனையும் ஏத்துனும் . அப்பத்தான் மக்கள் மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ்வார்கள்..?
போதும் உங்க அக்கபோரு
arasaangkatthirkku இன்னொரு வழி உள்ளது நம்ம அரேபியாவுக்கு நம்ம BN உதவாக்கரை அமைச்சங்கள்அரபு பிரபுகளுக்கு பின்னால் பின்னால் கொடுத்து உங்கள் நிதி பற்றாக்குறையை டீர்துகொள்ளலாமே ஏண்டா மக்களை கஷ்ட படுட்டீறீங்க
விலைவாசியை கட்டுபடுத்த முடியாத BN அரசாங்கம் வாழ்க!!மக்கள் வயிற்றில் அடிக்கும் இந்த அரசாங்கம் வாழ்க !!
அப்பொ BRIM உதவித்தொகையைக் கொடுத்தது ஓட்டுக்காகத்தானே!
ஆட்சியை எப்பாடு பட்டாவது பிடிக்க வேண்டும், என்ன விலை கொடுத்தாவது புத்ரா ஜெயாவைத் தக்க வைக்க வேண்டுமென சவால் விட்டுவிட்டு, கஜானாவைக் காலியாக்கிவிட்டான். தேர்தலுக்கு முன் வாரி வாரி கொடுத்தான். அப்பொழுதே ஒரு மேதாவிக்குழு அமர்ந்து தேர்தலுக்குப் பின் எந்தெந்த வழிகளில் மக்களிடமிருந்து பணத்தைக் கறக்கலாம் என பட்டியல் போட்டுவிட்டது. அதை ஒவ்வொன்றாக செயல்படுத்துகிறது.