எம்பி, செனட்டர்களின் சம்பள உயர்வு மீதான அறிக்கை விரைவில் வெளிவரும்

1 kasimஎம்பி, செனட்டர்கள் ஆகியோரின் சம்பள, அலவன்ஸ் உயர்வு மீதான அறிக்கை அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறினார்.

இப்போது அவர்களின் சம்பளம் ரிம6,000. இது மற்ற நாடுகளில் கொடுக்கப்படுவதைவிட குறைவானதாகும் என்றாரவர்.

“கம்போடியா, தாய்லாந்து ஆகியவற்றில் எம்பிகளின் சம்பளம் யுஎஸ்$4,000 (ரிம12,000). உகாண்டாவில்கூட ஏறத்தாழ யுஎஸ்$ 2,500(ரிம7,000) கொடுக்கிறார்கள்”, என நேற்று மேலவையில் ஷஹிடான் கூறினார்.