டோல் கட்டணம் 50 சென்னிலிருந்து ரிம2 வரை உயரலாம்

fadillah2014, ஜனவரி முதல் தேதியிலிருந்து தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் உயரும் என்ற செய்தி இன்றைய நாளேடுகளில் பரவலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், டோல் கட்டணத்தை எவ்வளவு உயர்த்துவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனப் பொதுப்பணி அமைச்சர் பாடில்லா யூசுப் தெரிவித்ததாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

அது  50 சென்னிலிருந்து ரிம2 வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெடுஞ்சாலை பராமரிப்பாளர்கள் ஒப்பந்தப்படி மூன்றாண்டுகளுக்கு ஒரு தடவை சாலைக்கட்டணத்தைத் திருத்தி அமைத்துக்கொள்ளலாம். ஆனால், கடந்த ஆறாண்டுகளில் அவர்கள் கட்டணத்தைத் திருத்தவே இல்லை என அமைச்சர் கூறினார். அதனால் இப்போதைய கட்டண உயர்வு இரு மடங்காக இருக்கலாம்.

“இந்தச் சாலைக்கட்டண உயர்வுக்கு அரசாங்கம் ஒப்புக்கொள்ளாவிட்டால் அது அவர்களுக்கு ரிம400 மில்லியன் இழப்பீடு கொடுக்க வேண்டி இருக்கும்”, என பாடில்லா கூறியதாக சின் சியு டெய்லி கூறிற்று.