நஜிப்: மக்களை வசப்படுத்தும் அணுகுமுறையை நான் கடைப்பிடிப்பதில்லை

najibதம் அரசாங்கம் மக்களை வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதில்லை என்பதை வலியுறுத்திய  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தேசியப் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடனேயே அது எப்போதும் பாடுபட்டு வந்துள்ளது  என்றார்.

மக்களுக்கு ‘இனிப்பான வாக்குறுதிகளை’க் கொடுப்பதற்கு முன்னர் நாட்டின் வருமானம் தொடர்ந்து பெருகுவதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

“இந்த உண்மையை அனைவரும் அறிவீர்கள் என நம்புகிறேன். நாட்டைப் புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதுதான் எங்கள் வழிமுறை. மக்களை வசப்படுத்த வேண்டும் எனச் செயல்படுவது எங்கள் அணுகுமுறை அன்று”. இன்று கோலாலும்பூரில் அரசாங்கப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கியூபெக்சின் 26வது மாநாட்டில் பேசியபோது நஜிப் இவ்வாறு குறிப்பிட்டார். 

“மக்களை வசப்படுத்தும் உத்திகளைக் கையாண்டு பிரதமராகி விடலாம். ஆனால், அந்த வழிமுறை நம் அன்புக்குரிய நாட்டின் எதிர்காலத்தை அழித்துவிடும்”, என்றாரவர்.