மருத்துவமனை கூரை இடிந்து விழுந்தது பற்றி ரென்ஹில் நிறுவனம் வாயைத் திறக்கவில்லை

hospitalரிம690 மில்லியன் செலவில் கட்டப்பட்ட ஸ்ரீசெர்டாங் மருத்துவமனையில் உள்கூரை பல தடவை இடிந்து விழுந்திருந்தாலும் அது பற்றி அந்த மருத்துவமனையைக் கட்டிய குத்தகை நிறுவனமான ரென்ஹில் இதுவரை கருத்துரைக்கவில்லை.

அந்நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, அவ்விவகாரம்  பொதுப்பணித் துறை விசாரணையில் இருப்பதால்  கருத்துரைப்பதற்கில்லை என்று கூறி விட்டது.

ஏழாவது தடவை உள்கூரை இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குத்தகை நிறுவனம் விசாரிக்கப்படும் எனச் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறி இருந்தார்.

ஆனால், குத்தகையாளர் யார் என்பதை அவரோ பொதுப்பணி அமைச்சர் பாடில்லா யூசுப்போ தெரிவிக்கவில்லை.

ரென்ஹில்லின் பொறுப்புறுதி மருத்துவமனை செயல்படத் தொடங்கிய இரண்டாவது ஆண்டில், 2007-இலேயே முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது.

எனவே, அதன்பின்னர் மருத்துவமனையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்ற நிறுவனங்கள் விசாரிக்கப்படலாம் எனத் தெரிகிறது.