டோல் கட்டண உயர்வுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு

tollஅங்காத்தான் பிலியா இஸ்லாம் மலேசியா (அபிம்), கெராக்கான் மஹாசிஸ்வா செ-இஸ்லாம் மலேசியா (காமிஸ்) ஆகிய அமைப்புகள் நெடுஞ்சாலைக் கட்டண உயர்வை எதிர்க்கப்போவதாக அறிவித்துள்ளன.

தேசிய மாணவர் அமைப்பான காமிஸ், “ஹிம்புனான் அமானா ரக்யாட்” என்ற பெயரில் ஏற்கனவே எதிர்ப்பியக்கத்தைத் தொடங்கி விட்டதாகக் கூறியது. அபிம் விரைவில் எதிர்ப்பு இயக்கத்தைத் தொடக்கும். .

டோல் கட்டணத்தை உயர்த்தியது மற்றவர்களின் நலனை மதிக்காத ஒரு செயல் என்று சாடிய அவ்வமைப்புக்கள், அதனால் மக்களின் நிதிச் சுமை கூடியுள்ளது என்றன.

“சாலைப் பராமரிப்பு நிறுவனங்களுக்குச் சாதகமாக டோல் கட்டண விகிதத்தை உயர்த்தும் முடிவு, மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதைத் தெளிவாகக் காண்பிக்கிறது”, என அபிம் நேற்று ஓர் அறிக்கையில் கூறிற்று.