ஆர்ஓஎஸ் விளக்கமளிக்க வேண்டும், இல்லையேல் சட்ட நடவடிக்கை: டிஏபி எச்சரிக்கை

gobindsingதலைமைத்துவ தேர்தல்மீதான சர்ச்சை முடிவில்லாமல் தொடர்வதால் வெறுத்துப்போன டிஏபி, சங்கப் பதிவதிகாரிக்கு (ஆர்ஓஎஸ்) எதிராக நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.

செப்டம்பர் 29-இல் நடந்த டிஏபி மத்திய நிர்வாகக் குழுத் தேர்தலைத் தான் அங்கீகரிக்கவில்லை என ஆர்ஓஎஸ் டிஏபி-க்குக் கடிதம் அனுப்பி வைத்திருந்தது. அது சட்டத்தைமீறிய ஒரு செயல் என்றுரைத்த டிஏபி,  கடிதம் அனுப்பப்பட்டதற்கு ஆர்ஓஎஸ் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது அதைத் திரும்பப் பெற வேண்டும். தவறினால் அதன்மீது வழக்கு தொடரப்படும் என்று கூறியது.

“ஆர்ஓஎஸ் அதன் அதிகாரத்தைமீறி நடந்து கொள்ள முடியாது; கூடாது. அது சட்டமீறல் ஆகும்”, என்று கூறிய டிஏபி சட்ட விவகாரப் பிரிவுத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, “தேவை என்றால் நீதிமன்றம் செல்லவும் கட்சி தயார்”, என்றார்.