பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், பற்றாக்குறை நிலையைச் சரிசெய்ய உதவித் தொகைகளைக் குறைத்து விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்று அரசாங்கம் கூறுவதை நொண்டிச்சாக்கு என வருணித்தார்.
சுமையை மக்களின்மீது ஏற்றிவைத்துவிட்டு அரசாங்கம் அதன் ஊதாரித்தனமான செலவுகளைத் தொடர்கிறது என்றந்த முன்னாள் நிதி அமைச்சர் சாடினார்.
“ஊழல், வீண் விரயம் போன்றவற்றை ஒழித்துக்கட்டி பிறகு இந்நடவைக்கைகளை மேற்கொண்டிருக்கலாம்.
“அதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. இப்போதே தொடங்கலாமே, தயக்கம் ஏன்?”, என்று அன்வார் வினவினார்.
உண்மை தான்! மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்று சொல்லுவார்கள். எந்த முயற்சியுமே செய்யாமல் மக்கள் தலையில் மிளகாய் அரைப்பது அம்னோ அரசாங்கத்தின் கையாலாகா தனத்தைக் காட்டுகிறது!
அம்னோ ஒரு கொள்ளை கூட்ட கட்சி
இந்த umno மரமண்டைகளுக்கு ஏன்தான் மக்களின் சுமை புரியவில்லையோ………….