அட்னான்: பிஎன் கட்சிக் கூட்டங்களில் இனவாதப் பேச்சு சகஜமானதுதான்

adnanமசீச இளைஞர் பேரவையில் அம்னோ பற்றிக் குறைகூறப்பட்டதை பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் பெரிதுபடுத்த விரும்பவில்லை. மலேசியாவில் இப்படிப்பட்ட இனவாதப் பேச்சு வழக்கமான ஒன்றுதான், அது ஒரு பெரிய விவகாரமல்ல என்றாரவர்.

 

அம்னோ பேரவையில்கூட மலாய்க்காரர் நலன் தொடர்பில் பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.. அது இனவாதமாகக்கூட தோன்றலாம் என்றவர் கூறினார்.

“சீனர்களும் அதைத்தான் செய்கிறார்கள்…….அதனால் நான் குறை சொல்ல விரும்பவில்லை.

“இது ஒரு விவகாரமே அல்ல. இது அவர்களின் தேர்தல். அதனால், தாங்கள் எதற்காகவோ போராடுவதாக அவர்கள் காண்பித்துக் கொள்கிறார்கள்”, என தெங்கு அட்னான் கூறினார்.