வார இதழான த ஹீட் செய்தித்தாளுக்குக் காலவரையின்றி தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
உள்துறை அமைச்சிடமிருந்து தடை உத்தரவு வந்திருப்பதைத் தகவலறிந்த வட்டாரங்கள் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தின. ஆனால், எதற்காக தடைவிதிப்பு என்பது துல்லியமாக தெரியவில்லை.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் பற்றி நவம்பர் மாத இதழில் அதில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை தடைவிதிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
செய்திதாளின் முகப்பில் “அனைவரின் கண்களும் பெரும் செலவாளியான பிரதமர் நஜிப்பின்மீது” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த அக்கட்டுரை, பிரதமரும் அவரின் துணைவியாரும் ஆடம்பரமாக செலவுசெய்வது குறித்து கேள்வி எழுப்பி இருந்தது.
தவறை உணர்ந்து தங்களை திருத்திகொள்ள மறுக்கும் முதிர்சியற்ற முட்டாள்கள், மந்திரிகள் ஆனால் , இப்படிதான் பல பத்திரிகைகளின் உரிமைகள் பறிபோகும் !
அடிச்சான்யா ஆப்பு. பத்திரிக்கை சுதந்திரம் காற்றில் பறக்குது.