பதவி விலகிச் செல்லும் மசீச மகளிர் பகுதித் தலைவர் இயு சொக் தவ், தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் கட்சியைச் சீரமைப்பது அவசியம் என அறைகூவல் விடுத்தார். சீரமைப்புக்கு இதுவே கடைசி வாய்ப்பு, இதைத் தவறவிட்டால் அழிவுதான் என்றவர் எச்சரித்தார்.
2008 தேர்தல் தோல்விக்குப் பின்னரே சீரமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாததால் 2013-இல் மேலும் ஒரு படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.
“சீனர்களைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சிக்குச் சீனர்களின் வாக்குகள் 15 விழுக்காடுதான் கிடைத்தது.
“மசீச கிட்டத்தட்ட தேவையற்ற கட்சிபோல் ஆகிவிட்டது. புதுப்பித்துப் புத்துயிர் அளிக்காவிட்டால் இந்த 64-வயதுக் கட்சி மறக்கப்பட்ட கட்சியாக மாறி விடலாம்”, என்று இயு எச்சரித்தார்.