ஜனநாயகச் சீரமைப்புக்கு இடமளிப்பதாகக் கூறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டார் என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டினார். த ஹீட் வார இதழுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருப்பது அதற்குத் தக்க சான்று.
“அது, முரண்படும் கருத்துக்களும் குறைகூறல்களும் சகித்துக்கொள்ளப்படுவதில்லை என்பதைதான் காண்பிக்கிறது.
“அது, ஜனநாயகத்துக்குக் கூடுதல் இடமளிக்கப்படும் எனப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் கொடுத்த வாக்குறுதிக்கு மாறான செயலாகும்”, என அன்வார் சாடினார்.