சிலாங்கூரில் ஊராட்சி மன்றங்கள் வர்த்தக உரிமக் கட்டணங்களை 400 விழுக்காடு உயர்த்தி இருப்பதை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கட்டணத்தை உயர்த்தியுள்ள ஊராட்சி மன்றங்களில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம், சுபாங் ஜெயா முனிசிபல் மன்றம் ஆகியவையும் அடங்கும்.
“மாநில அரசு சிறிய, நடுத்தர வர்த்தகர்களும் அவர்களின் ஊழியர்களும் டோல், மின்கட்டண உயர்வையும், பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தையும் எதிர்நோக்குவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“கொள்கை மாற்றங்களைச் செய்யும்போது மக்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்”, என்றாரவர்.