நஜிப்: விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

najibபொருளாதார நிலைத்தன்மையைத்  தொடர்ந்து  நிலைநிறுத்த டோல், மின் கட்டண உயர்வுகள் தவிர்க்க இயலாதவை என்று கூறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மக்கள்மீது அவற்றின் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

அரசாங்கம் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொள்வதில்லை என நினைக்க வேண்டாம். ஆனால், கட்டண உயர்வுகளைத் தவிர்ப்பது இயலாத செயலாகும் என்றவர் கூறினார்.

அப்படிச் செய்தால், “நாட்டின் பொருளாதாரம் பாதிப்புறும். மக்கள் மேலும் சிரமங்களை அனுபவிப்பவர்”, என நஜிப் கூறினார்.