த ஹீட் இதழ் தடைவிதிப்புக்கு ஊடகக் குழுக்கள் கண்டனம்

chinத ஹீட் வார இதழுக்குத் தற்காலிகத் தடை விதிக்க உள்துறை அமைச்சு செய்துள்ள முடிவை ஊடகக் குழுக்கள் சாடியுள்ளன. அது “விவேகமற்ற” நடவடிக்கை என்றும் ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் எனவும் தேசிய செய்தியாளர் சங்கம் (என்யுஜே) கூறியது.

அதன் தலைவர் சின் சங் சியு (இடம்),  அந்தச் செய்தித்தாள் அதன் கடமையைத்தான் செய்தது. அதற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது என்றார்.

“அரசாங்கத்தின் தவறுகளைக் கண்காணிக்கும் பொறுப்பும் ஊடகங்களுக்கு உண்டு.

“அது பற்றிய தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்கிறோம். அவை மக்கள் நலன் சம்பந்தப்பட்ட தகவல்கள் என்பதால் அவற்றை அறியும் உரிமை மக்களுக்கு உண்டு”, என்றாரவர்.

இதற்குமுன்னதாக,  இதழியல் சுதந்திரத்துக்கான மையம் (சிஐஜே),  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசு கூடுதல் பேச்சுரிமை வழங்கப்படும் என்று கூறி இருந்தாலும் உண்மையில் அதற்கு அதில் அக்கறை இல்லை என்று கூறி இருந்தது.  த ஹீட் இதழுக்குத் தற்காலிகத் தடை விதிக்கும் முடிவே அதற்கு நல்ல சான்று என்றது கூறிற்று.