நஜிப் ‘அடுத்த மண்டேலா’வாக விளங்க வேண்டும்: ஒரு மசீச பேராளரின் விருப்பம்

mcaபிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன-அடிப்படையிலான கொள்கைகளுக்கு முடிவுகட்டி “அடுத்த மண்டேலாவாக” விளங்க வேண்டும் என மசீச கெடா  பேராளர் லீ இயான் வாங் வலியுறுத்தினார்.

மசீச பொதுப்பேரவையில் உரையாற்றிய லீ,  இனஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராடிய காலஞ்சென்ற தென்னாப்ரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறும் பேராளர்களைக் கேட்டுக்கொண்டார்.

“மாபெரும் தலைவர் மெண்டேலாவுக்காக ஒரு நிமிட மெளனம் அனுசரித்தோம். இனப்பாகுப்பாட்டுக்கு எதிரான போராட்டம் அவருடன் மறைந்து விடக்கூடாது.

“ஒரு நாள் நஜிப்பும் இன-அடிப்படையிலான கொள்கைகளுக்கு முடிவுகட்டி அடுத்த மெண்டேலாவாக திகழ வேண்டும் என்பதே என் விருப்பம்”, என்றாரவர்.