நிறுவனத்துறையிலும் பொருளாதாரத் துறைகளிலும் மலாய்க்காரர் முன்னிலை குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், மலாய்க்காரர் உரிமை மறுக்கப்படுவது இதற்குக் காரணம் அல்ல.
மலாய்க்காரர் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசாவின் 4ஆம் ஆண்டுக்கூட்டத்தில் உரையாற்றிய தெங்கு ரசாலி ஹம்சா இவ்வாறு கூறினார்.
“மலாய்க்காரர்களிடம் போட்டியையும் சிக்கல்மிக்க வர்த்தகச் சூழலையும் எதிர்த்து நிற்கும் மன உறுதி இல்லை என்பதுதான் முக்கிய காரணமாகும்”.
மலாய்க்காரர் பற்றிய குறைகூறல்களைக் கேட்க விரும்பாத ஒரு கூட்டத்தில் இப்படி ஒரு கருத்தைப் பட்டென்று போட்டுடைத்திருக்கிறார் அந்த குவா மூசாங் எம்பி.
மலாய்க்கார்களிடம் கட்டொழுங்கை மேம்படுத்தி, போட்டிகளை எதிர்த்து நிற்கும் ஆற்றலை வளர்த்து சரியான அணுகுமுறைகளையும் அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்றாரவர்.
தொடர்ச்சியாக உதவிகளைப் பெற்றுவரும் மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களும் தாங்கள் வெற்றிபெறாததற்கு மற்ற இனத்தவ்ரைக் குறை சொல்லக்கூடாது எனவும் ரசாலி குறிப்பிட்டார்.
சொல்லவேண்டிய விஷயத்தை சொல்லவேண்டியவர்களிடம்.தைரியமாக சொல்லிய துங்கு ரசாலி அவர்களுக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்.
நல்ல சொல்லு, தலைவா !
தெங்கு ரசாலி உளறுகிறார். போட்டி போட்டு கொண்டு எதிர் எதிரே
நாசி லெமாக் விற்பதை இவர் பார்கவில்லையா ?
மலாய்க்காரர்களை காலா காலம் தங்க கரண்டியால் ஊட்டி வளர்த்து விட்டு இப்பொழுது உழைத்துச் சாப்பிட சொன்னால் செய்வார்களா? வெள்ளைக்காரன் இவர்களின் குணாதிசியங்களை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு சமஸ்தானபதிகள் கேட்டதையும் கேட்காததையும் ஊத்திக் கொடுத்து தடவிக் கொடுத்து தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொண்டான். அதே அணுகுமுறையை அம்னோவும் இது நாள் வரை கையாண்டு வந்தது. அப்பவும் போதவில்லை என்ற பிரச்சனைத்தான் எழும்புகின்றது. காரணம், உழைக்காமல் சுகத்தைக் காணும் நனவுதான். அரசாங்கம் எவ்வளவுதான் கொடுத்து உதவினாலும் அதன் பெருமையை அறியாத மலாய்காரர்களிடம் (cronies) கொட்டினால், சென்றடைவதோ சீனர்களின் கையில். அப்புறம் எங்கே மிஞ்சும். என்றாவது ஒரு நாள் இந்நாட்டை அடகு வைக்க வேண்டிய காலம் வரும். அது வரையில் இவர்கள் திருந்த மாட்டார்கள்.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள். ஆனால் இங்கே தன் பிள்ளையை ஊட்டி வளர்ப்பதால் ஊரான் பிள்ளைகள் மேலும் மேலும் போட்டி ஆற்றலுடன், தானே வளர்கின்றனர். வெளிநாட்டில் போட்டி விளையாட்டில் தங்கம் வென்று திரும்பும் நம் பிள்ளைகளை வரவேற்க ஒரு நாதியும் இல்லை. ஆனால் அதுவே ‘அவர்கள்’ பிள்ளைகளாக இருந்தால் அந்த வரவேற்பே தனி தான். வெட்கக்கேடு…வெட்கக்கேடு..வெட்கக்கேடு..!
ஊட்டி வளர்த்த பிள்ளை ஊ…..கிட்டு போகும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள் ! மலாய்காரர்கள் மத்தியில் இனவாததைதான் புகுத்தினர் இந்த அரசியல் வாதிகள் குறிப்பாக, முன்னாள் பிரதமர் மகாதிர் !
எது எப்படியோ உண்மை உங்களுக்கு தெரிந்துதான் இருக்கிறது
இந்த உண்மை பிரதமர் நஜிபுக்கும் தெரியும் தானே! ஆனால் தெரியாதது போல நடிக்கிறாரே!
இது ஒரு உண்மை, நிஜமானே உண்மை
சக்கரவர்த்தி : அது அவர்களுக்கு கை வந்த கலை