‘மலாக்கா கம்போங் செட்டியைக் காப்பாற்ற யுனெஸ்கோவை அழைப்பீர்’

1kg chittyகலாச்சார கிராமமான கம்போங் செட்டி பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனச் செய்திகள் வந்திருப்பதால் அங்கு மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசனை கூற யுனெஸ்கோவை அழைக்க வேண்டும்.

காவியன்  இலக்கியக் குழுத் தலைவரான உதய சங்கர் இவ்வாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். 1414ஆம் ஆண்டிலிருந்து இருந்துவரும் 1 kg chitty1அக்கம்போங் அரச இதழிலும் பதிவு பெற்றிருக்கிறது என்றாரவர்.

“கம்போங் செட்டி ஒரு கலாச்சார கிராமமாக அரச இதழிலும் பதியப்பட்டிருப்பதால் அதற்குப் பக்கத்தில் உயரமான கட்டிடங்கள் கட்டுவதைத் தடுக்கும் சட்டவிதிகள் நிச்சயமாக இருக்கும்”, என்றவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

“அவசியமென்றால், மலாக்கா வரலாற்றைப் பாதுகாக்கும் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் இட்ரிஸ் ஹருனுக்கும் ஆலோசனை கூற யுனெஸ்கோ பிரதிநிதி ஒருவரைக்கூட அழைக்கலாம்”, என்று உதய சங்கர் கூறினார்.