மகாதிர்: மனிதர்கள்தான் தீமை செய்கிறார்கள் ஆவிகள் அல்ல

1 dr mதீயச் செயல்களுக்கும் வன்முறைகளுக்கும் ஆவிகள் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்டவை காரணம் என்பதைக் காட்டிலும் மனிதர்களே காரணம் என்பதைத்தான் அதிகம் நம்புவதாகக் கூறுகிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.

மலாய்க்காரர்களுக்கு ஆவிகள், பூதங்கள்மீது தீரா மோகம் இருக்கிறது. அது, திரைப்படங்களாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் வெளிப்படுகின்றது.  

இந்நம்பிக்கை இஸ்லாத்துக்கு எதிரானது. ஆவிகளிடமிருந்து பாதுகாக்க அலுவலகங்களிலும் அரசாங்க மருத்துவமனைகளிலும் நீரைத் தெளிக்கிறார்கள், பிரார்த்தனை செய்கிறார்கள்.

“இதன் தொடர்பில் உலாமாக்களின் கருத்தறிய விரும்புகிறேன். ஆவிகளும் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்களும் உண்டா? அவர்கள் எங்கிருந்து வருகின்றனர்? இஸ்லாத்தில் அவர்களின் நிலை என்ன?

“மனிதர்கள் தீமை செய்கிறார்கள், வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பதைத்தான் நான் அதிகம் நம்புகிறேன். இயற்கைக்கு அப்பாற்ப்பட்டவை பற்றியோ ஆவிகள் பற்றியோ அச்சம் எனக்கு இல்லை”.

தம் வலைப்பதிவில் மகாதிர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.