அம்னோவின் இடத்தில் இருந்து கொண்டு மலாய்க்காரர் நலன் காப்போம் என்று பெர்காசா கூறுவது நடவாத காரியம் என்கிறார் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இசா சமட்.
மலாய்காரர் நலன் காத்தல் என்பது சாதாரணமான செயல் அல்ல என்று கூறிய இசா, பெர்காசாவே அம்னோவிடமிருந்து நிறைய உதவி பெற்றுள்ளது என்றார்.
“அது உணர்ச்சிவயப்பட்டு சொன்ன ஒரு கருத்து. அம்னோவின் இடத்தை நிரப்புவது எளிதன்று”, என முன்னாள் நெகிரி செம்பிலான மந்திரி புசாரும் இப்போது பெல்டா தலைவருமான இசா, செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று, பெர்காசா ஆண்டுக்கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் இப்ராகிம் அலி,, 500,000 உறுப்பினர்களைக் கொண்ட பெர்காசாவே நாட்டில் நல்ல கட்டமைப்பைக் கொண்ட அரசியல் கட்சி என்றார். அம்னோ செல்வாக்கு இழந்து வருவதால் அதற்கு மாற்றாக பெர்காசா விளங்க முடியும் எனவும் அவர் கூறினார்.
அம்னோவின் உதவியினால் வயிறு வளர்க்கும் ஓர் அமைப்பு பெர்காசா! இவர்களுக்கே சாப்பாட்டுக்கு வழியில்லை! இவர்கள் மற்றவர்கள் வயிற்றை எப்படி நிரப்புவது?
இவர்கள் (பெர்காசா) நாட்டை ஆண்டால் இன்னொரு தாய்லாந்து எதிர்பார்க்கலாம்.
முடிந்த தேர்தலில் உன் அமைப்பை சேர்ந்த நீயும் , ஜுல் கிப்ப்ளியும் மக்களால் புறக்கணிக்கப் பட்டவங்க..? நீயா வந்து அம்னோவை புரனாமைப்பு செய்ய போறே..? அது சரி உன் சமுகமே உன்னை செருப்பால அடித்து விட்டினால்தான் உனக்கு புத்தி வரும்..?
நீ சொல்றது உண்மை! அம்னோ பெர்கசவை முற்றாக அழிக்க வேண்டும்! பெரகாச அம்னோவை முற்றாக அழிக்க வேண்டும்! இடையிலே நாங்கள் குளிர்காய வேண்டும்! அட அட அட என்ன ஒரு
எதிர்க்காலம் நாட்டுக்கு அதன் பிறகு………ருக்குமணியே பர பர பர!…..