மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை: குவான் எங்குக்கு ஜஹாரா எச்சரிக்கை

1 jaharaபினாங்கு சட்டமன்ற எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட், தம்மை “இனவாதப் பாட்டி” என்று குறிபிட்டதற்காக முதலமைச்சர் லிம் குவான் எங் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

செபராங் பிறை முனிசிபல் மன்றம் மலாய்க்கார அங்காடி வியாபாரிகளின் கடைகளாக பார்த்து நடவடிக்கை எடுப்பதாக ஜஹாரா சட்டமன்றத்தில் குற்றம் சாட்டியதை அடுத்து லிம் அவரை “நியாயமற்ற, இனவாதப் பாட்டி” என  வருணித்திருந்தார்.

மறுநாள் லிம், ஜஹாராவைப் “பாட்டி” எனக் கூறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனால், அவரை “இனவாதி” எனக் கூறியதைத் திரும்பப் பெற அவர் தயாராக இல்லை.