2014 பட்ஜெட் பல சலுகைகள் பற்றிப் பேசினாலும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க அவை உதவும் என்ற நம்பிக்கை பெரும்பாலான மலேசியர்களுக்கு இல்லை. அவர்களின் இப்போதைய பெருங் கவலை எல்லாம் எண்ணெய், சீனி, ஆகியவற்றின் விலை உயர்வும் மின்கட்டண உயர்வும்தான்.
மலாயாப் பல்கலைக்கழக ஜனநாயக மற்றும் தேர்தல் மையம் (Umcedel) மேற்கொண்ட ஒரு கருத்துக்கணிப்பில் இது தெரிய வந்தது. கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 55 விழுக்காட்டினருக்கு வாழ்க்கைச் செலவினத்துக்கு பட்ஜெட் உதவும் என்ற நம்பிக்கை இல்லை. விலை உயர்வு, சீனி உதவித்தொகை இரத்து, பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) போன்றவற்றைச் சமாளிக்க பந்துவான் ரக்யாட் 1மலேசியா (பிரிம்) உதவும் என்றும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை.
பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுற வேலையெல்லாம் இங்கே வேணாம். நீங்க என்னத்த ஆட்டினாலும் அழுகையை நிப்பாட்டுற குழந்தைகள் நாங்கள் அல்ல…
விலைவாசி உயர்வைத் தடுப்பதற்கு அரசாங்கம் உருப்படியாக எதனையும் செய்யவில்லை. அதற்கான உண்மையான முயற்சிகள் இல்லை. சமையல் எண்ணெய், பால் பவுடர் போன்ற அத்தியாவசியமானப் பொருட்களின் விலை ஏற்றம் அலறடிக்கிறது. நடுத்தரக் குடும்பங்களின் நிலையே இப்படி என்றால் ஏழைகளின் நிலைமை?
வீட்டை விட்டு வெளியே போவதற்கு ஒரு தடவைக்கு இரு தடவை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஐம்பது ரிங்கிட்டை மாற்றினால் ……..?என்னதான் திட்டமிட்டு செலவு செய்தாலும் விலைவாசிகளினால்…….? .