உள்துறை அமைச்சு, அச்சக, பதிப்பகச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களைத் தண்டிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என ஜிங்கா 13 அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் த ஹீட் செய்தித்தாளுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டது ஒரு “கடுமையான” நடவடிக்கை என்று குறிப்பிட்ட ஜிங்கா 13, தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மகஜர் ஒன்றை உள்துறை அமைச்சிடம் கொடுத்தது.
“உள்துறை அமைச்சு என்னதான் காரணம் கூறினாலும், அது த ஹீட்டுக்கு வழங்கப்பட்ட கடுமையான தண்டனைதான்”, என அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நிக்சன் அப்டில்லா கூறினார்.