மே 5 பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல்போன எதிரணியினர் தாங்கள் பரப்பும் பொய்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப டிசம்பர் 31 பேரணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு கூறிய தொடர்பு, பல்லூடக அமைச்சர் அஹமட் ஷபரி சிக், ‘கறுப்பு 505’இயக்கம், ‘பெர்சே’ பேரணிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்தவர்களே இதன் பின்னணியிலும் இருக்கும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்றார்.
“ஆனால், மக்கள் ஏமாற மாட்டார்கள்”, என்றாரவர்.
அரசாங்கத்தின்மீது மக்களுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ண எதிரணியினர் பொய்களைப் பரப்பி வருகிறார்கள் என்று ஷபரி மேலும் கூறினார்.
-பெர்னாமா
நாகரீகமற்ற போகலை இனியும் மக்கள் நம்பமாட்டார்கள்.
இப்படியே எவ்வளவு நாட்கள்தான் பொய்களை சொல்லி சொல்லி எங்களை ஏமாற்றுவிர்கள். உங்களின் வாக்குறுதிகளைத்தான் நாங்கள் ஒவ்வொருநாளும் பார்க்கிறோமே…. நீங்கள் பொய் சொல்லி விட்டு எதிர் கட்சிகளின் மீது பழி சொல்லி தப்பி விட வேண்டாம்…. இந்த நாடு உங்களை நம்பி ஏமாந்தது போதும்….
இல்லை, இல்லை. தே.மு.- யின் முகத்திரையை கிழித்தெறியும் முயற்சி என்று திருத்திச் சொல்லுங்கள்.