கூச்சிங்கில் கிரீன் ரோட்டில் உள்ள பிரதமர்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பாரின் (வலம்)வீட்டுக்குள் புகக் கொள்ளையர்கள் திட்டமிட்டனர். ஆனால், அலாரம் ஒலி எழுப்பியதால் அவர்களின் முயற்சி ஈடேறவில்லை.
அலாரம் ஒலி கேட்டு இரண்டு போலீஸ்காரர்களும் ரேலா படையினர் இருவரும் வீடு இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டதாக கூச்சிங் போலீஸ் தலைவர் ஏசிபி ரோஸ்லான் பெக் அஹ்மட் கூறினார்,
வேலியில் ஓட்டைப் போட்டு வீட்டு வளாகத்துக்குள் சென்ற திருடர்கள் சன்னலைத் திறக்க முயன்றபோது அலாரம் அடிக்கத் தொடங்கியது என்றாரவர்.
சம்பவம் நிகழ்ந்தபோது அமைச்சரும் குடுமப்த்தாரும் வீட்டில் இல்லை. அவர்கள் விடுமுறையைக் கழிக்கச் சென்றுள்ளனர்.