மகாதிர்: செலவுகளைக் குறைப்பீர் அல்லது விலை உயராமல் தடுப்பீர்

1 dr mமுன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அரசாங்கம் விலைகளை உயர்த்துவதைவிட செலவுகளைக் குறைக்கலாம் அல்லது நடப்பு விலைகளை அப்படியே வைத்திருக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தம் வலைப்பதிவில் “செலவினக் குறைப்பு”த் தத்துவத்தைச் சுட்டிக்காட்டிய டாக்டர் மகாதிர், ஒரு தொழில் போட்டியை எதிர்நோக்கும்போது அல்லது அதன் செலவினத்தால் ஆதாயம் குறையும்போது அது ஒன்று விலைகளை உயர்த்தலாம் அல்லது செலவைக் குறைக்கலாம் என்றார்.

“ஓரளவுக்கு விலையை உயர்த்தலாம். அதனால் விற்பனை குறையக்கூடும், ஆதாயமும் குறையும். அதைவிட செலவைக் குறைத்து விலைகளை அப்படியே வைத்திருப்பது அல்லது மிகக் குறைந்த விகிதத்தில் விலையை உயர்த்துவது மேலானது.

“இதையே அரசாங்கமும் செய்யலாம். அதன் செலவுகளை ஆராய்ந்து எது தேவையானது எதைக் குறைக்கலாம், எந்தச் சேவையைக் குறைத்துக்கொள்ளலாம் அல்லது திருத்தி அமைக்கலாம் என முடிவு செய்யலாம்”, என்றவர் கூறினார்.