முகநூலில் பேரணிக்கு அழைப்பு விடுத்த இளைஞன் கைது

1 hadi hoஅரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம்கொண்ட பேரணி என்று கூறப்படும் புத்தாண்டுக்கு முதல்நாள் பேரணியில்  கலந்துகொள்ள முகநூலில் அழைப்பு விடுத்த இளைஞனைப் போலீசார் கைது செய்தனர்.

அஸ்மால்ஸ் ஹட்ஸெனி II என்னும் பெயரில் முகநூலில் பதிவிட்டு வரும் அவ்வாடவனை இன்று காலை 11 மணிக்கு சரவாக், சரதோக்கில் கைது செய்ததாக தேசிய சிஐடி தலைவர் ஹாடி ஓ அப்துல்லா கூறினார்.

“விசாரணைக்காக சந்தேகத்துக்குரிய அந்நபரை கோலாலும்பூருக்குக் கொண்டு வருவோம்”, என்றாரவர். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குக் கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக அவ்விளைஞன்மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.