த ஹீட் தடைவிதிப்பில் பிரதமர் தலையிட வேண்டும்

1-kit-siang1வார இதழான த ஹீட் தடைசெய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல் பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டில்(பிஎப்ஐ) மலேசியாவின் தகுதிமதிப்பீடு மியான்மாரைவிடவும் தாழ்ந்து போகலாம்.

டிஏபி தலைவர் லிம் கிட் சியாங், ரிப்போர்டர்ஸ் வித்தவட் போர்டர்ஸ் அமைப்பின் 2011/2012  பத்திரிகைகளின் தரவரிசையில் மலேசியா 23 இடங்கள் குறைந்து 122வது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். மியான்மார் 18 படிகள் முன்னேறி 151வது இடத்தைப் பிடித்துள்ளது.

“நஜிப் தலையிட்டு த ஹீட்-டுக்கு அதன் பதிப்புரிமையைத் திரும்பப் பெற்றுத்தர வேண்டும். இல்லையேல் இச்சம்பவமே 2014 பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டில் மலேசியாவின் இடம் நாட்டின் வரலாற்றில் முன் எப்போதுமில்லாத வகையில் வீழ்ச்சி அடையக் காரணமாக அமையலாம். மியான்மாரை விடவும் தாழ்ந்த நிலைக்குப் போகலாம்”, என லிம் கூறினார்.