கம்போங் ரயில்வே உடைக்கப்பட்டது பற்றி செய்தி வெளியிட்ட இணையச் செய்தித்தளமான ஃபிரி மலேசியா டுடே (ஃஎப்எம்டி) மீதும் தமிழ் நாளிதழான மக்கள் ஓசை மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்) திட்டமிட்டிருப்பதை அரசுசார்பற்ற அமைப்பு ஒன்று சாடியுள்ளது.
“செந்தூலில் கம்போங் ரயில்வே உடைக்கப்பட்டது பற்றி செய்தி வெளியிட்ட ஃஎப்எம்டி, மக்கள் ஓசை ஆகியவற்றுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் டிபிகேஎல்லின் திட்டத்தை மலேசிய இந்தியர் முற்போக்குச் சங்கம்(மிபாஸ்) கண்டிக்கிறது”, என அந்த என்ஜிஓ-வின் தலைமைச் செயலாளர் எஸ்.பாரதிதாசன் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
இது எல்லாம் ஒரு பத்திரிகை சுதந்திரம் வித ஒரு மிரட்டல்தான்.
இதுக்கெல்லாம் ஒரு விடிவுகாலமே இல்லையா?