போலீசார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியை இன்று காலை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். டிசம்பர் 31, விலை-உயர்வுக்கு எதிரான பேரணி தொடர்பில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
“டிசம்பர் 31-இல் குறிப்பிட்ட சில இடங்களில் குண்டுகள் வைப்பதில் நான் சம்பந்தப்பட்டிருப்பதாக அம்னோ வலைப்பதிவுகள் கிளப்பி விட்டிருக்கும் புரளி தொடர்பில் போலீஸ் என்னை விசாரணைக்கு அழைத்திருக்கலாம் என நினைக்கிறேன்”, என ரபிஸி நேற்றிரவு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
புத்தாண்டுக்கு முதல்நாள் விலை உயர்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக சமூக அமைப்புகள் நடத்தும் பேரணியை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டம் எனச் சில தரப்புகள் கூறி வருகின்றன.
குண்டுகள் வெள்ளி கிழமைகளில் தயவு செய்து வையுங்கள்.
மலேசியா போலிஸ் பேரு அகிலமெங்கும் mic காரண போல நாறுது பூய்