ஜாஹிட்: பேரணி விவகாரத்தில் விட்டுக்கொடுப்பதற்கில்லை

ahmad zahidடிசம்பர் 31-இல் விலை உயர்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஒரு முயற்சி என்று கூறிய  உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி  அவ்விவகாரத்தில் அரசாங்கம் “விட்டுகொடுக்கத் தயாராக இல்லை” என்றார்.

பேரணியில் மக்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொண்ட அஹ்மட் ஜாஹிட், பேரணி நடத்தும் திட்டத்தைக் கைவிடுமாறு அதன் ஏற்பாட்டாளர்களை வலியுறுத்தினார் என த ஸ்டார் கூறியது.

பேரணியை மாற்றரசுக்கட்சி ஆதரிப்பதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர், அது எதிரணியினரால் உருவாக்கப்பட்ட “கீழறுப்பு நோக்கம்கொண்ட அரசியல் கலாசாரம்” என்றும் வருணித்தார்.

“எதிரணியினர் பொறுப்பானவர்களாக நடந்துகொள்ள வேண்டும். நிலைமையைச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முனையக் கூடாது”, எனவும் அவர் வலியுறுத்தினார்.