போலீஸ்: என்ஜிஓகள் குண்டுவெடிக்கத் திட்டமிட்டிருப்பதாக சொல்லவில்லை

amarகோலாலும்பூர் துணை போலீஸ் தலைவர் அமர் சிங், டிசம்பர் 31 விலை உயர்வு-எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளும் 4 என்ஜிஓ-கள்  குண்டுகளை வெடிக்கத் திட்டமிட்டிருக்கின்றன எனத் தாம் சொன்னதில்லை என்கிறார்.

பேரணியில் கலந்துகொள்ளும் மற்றவர்கள் குண்டுகளை வெடிக்கும் அபாயம் இருப்பதை மட்டுமே தாம் சுட்டிக்காட்டியதாக அமர் கூறினார். அவரின் விளக்கம் உத்துசான் மலேசியாவில் வெளியாகி இருந்தது.

“செய்தியாளர் கூட்டமொன்றில் 4 என்ஜிஓ-களையும் அடையாளம் காட்டிப் பேசினேன். பேரணிக்கு அனுமதி இல்லை என்பதால் அது சட்டவிரோதமானது என்றேன்.

“குண்டுகளை வெடிக்கும் மிரட்டல் இருப்பதாகவும் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பார்கள் என்றும் கூறியது என்ஜிஓ-கள் பற்றிச் சொல்லப்பட்டதல்ல. முகநூலில் தனிப்பட்ட ஒருவர் பதிவிட்டிருந்ததை அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டது”, என்றவர் கூறினார்.

இரண்டு என்ஜிஓ-கள்,  சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டியதை அடுத்து அமர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.