2013-இல் செய்திகளின் நாயகர்………….

rosmahகடந்த பத்தாண்டுகளாக மலேசியாகினி வாசகர்கள் அந்தந்த ஆண்டில் செய்திகளின் நாயகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.

எவரொருவர் “அவரது செயல்களால் செய்தித் தலைப்புகளில் இடம்பெற்று, பொதுமக்களிடையே வாத-எதிர்வாதங்களைத் தோற்றுவித்து, நல்லதாகவோ கெட்டதாகவோ ,அரசியலில் தாக்கத்தையும் உண்டுபண்ணுகிறாரோ” அவரே செய்திகளின் நாயகர் ஆகிறார். 

அந்த வகையில் 2013-இல் செய்திகளின் நாயகராக தேர்வு செய்யப்பட்டிருப்பவர்- ரோஸ்மா மன்சூர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார்.

சில ஆண்டுகளாகவே சர்ச்சைக்குரியவராக விளங்கி வந்திருப்பவர் ரோஸ்மா. கடந்த ஆண்டு  செய்திகளின் நாயகர் பட்டியலில் 7வது  இடத்தைப் பெற்றிருந்த ரோஸ்மா, வெளிநாட்டுப் பயணத்துக்கு  அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்திய விவகாரத்தால்  எழுந்த சர்ச்சை அவரை இவ்வாண்டில்  முதல் இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

கடந்த ஆண்டில் செய்திகளின் நாயகர் என்ற விருதுக்குத் தேர்வு பெற்றவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்.

இவ்வாண்டில்  செய்திகளின் நாயகர் பட்டியலில் இரண்டாம் இடத்தைப்  பெறுபவர் உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி.

மூன்றாவது இடம் தேர்தல் ஆணையத்துக்கு.