இன்றைய பேரணிக்கு பக்காத்தான் இளைஞர்கள் ஆதரவு

pakatanஇன்றிரவு  டாட்டாரான் மெர்டேகாவில்  நடைபெறும்  விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக  பக்காத்தான் கட்சிகளின் இளைஞர் பகுதிகள் உறுதி  அளித்துள்ளனர்.

அன்வார் இப்ராகிமின்  குதப்புணர்ச்சி வழக்கின்போதுகூட குண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி  பரபரப்பை உண்டாக்கி, பிறகு அது கண்டுபிடிக்கப்படாமலேயே போனது என பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்ஸான் கயட், பிகேஆர் இளைஞர்  தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் அகின், டிஏபி இளைஞர் தலைவர் தியோ கொக் சியோங் ஆகிய மூவரும் கூட்டறிக்கை ஒன்றில் கூறினர். 

பேரணியின்போது குண்டுகள் இருக்கா,   விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழா.  பாதுகாப்புக் குழுவினர் அதை உறுதிப்படுத்துவர் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக பக்காத்தான் இளைஞர்கள் கூறினர்.