பனிப்போர்காலத் தந்திரங்கள் பலிக்கவில்லை, பூச்சாண்டி காட்டும் வேலை மக்களிடம் எடுபடவில்லை

ysayஉங்கள் கருத்து ‘ஆக, பொய் சொல்பவர் யார்?  40 ஆயிரம் வங்காள தேசிகள் வாக்களித்தனர்  என்ற அன்வாரா?  குண்டுகள் வெடிக்கப் போகிறார்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போகிறார்கள் என்று கூறிய நஜிப்பா?’

எச்சரிக்கையையும் மீறி 10,000பேர் திரண்டனர், போலீசார்  வழிவிட்டனர்

ஜெரார்ட் லூர்துசாமி:  தங்கள் உரிமைகளுக்காகவும் நல்வாழ்வுக்காகவும்  போராட முனைந்த மக்களைத் தடுக்க போலீசும்  மூளையற்ற என்ஜிஓ-களும்  விடுத்த மடத்தனமான எச்சரிக்கைகள்,  மிரட்டல்களையும் மீறி பல்லாயிரக்கணக்கில் திரண்டுவந்த மலேசியர்களை எண்ணி  பெருமிதம் கொள்கிறேன்.

சராசரி மலேசியனின் வாழ்க்கை முன்னிலும்  மோசமாகியுள்ள நிலையில் என்ன புத்தாண்டுக் கொண்டாட்டம் வேண்டிக் கிடக்கிறது?

அமல்காம்:  நாங்கள் டாட்டாரான் சென்றடைந்தபோது அங்கு நீலநிற-ஆடைகள்தாம் நிரம்பி இருந்தன- போலீஸ், ரேலா, டிபிகேஎல் ஆள்கள்.  புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சி முழு வீச்சில் சென்று கொண்டிருந்தது.

10மணிவரை  பார்த்துக் கொண்டிருந்துவிட்டு  பேரணி நோக்கிச் சென்றோம். பேரணியில் இருந்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்.  அவர்களைப் பார்க்க பெருமையாக இருந்தது.

அடிப்படை:   ஆக, பொய் சொல்பவர் யார்? 40, ஆயிரம் வங்காள தேசிகள் வாக்களித்தனர் என்ற அன்வாரா? குண்டுகள் வெடிக்கப் போகிறார்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போகிறார்கள் என்று கூறிய நஜிப்பா?

நாங்கள் சாமானியர்கள், ஐயா.  எங்களிடம் குண்டு தயாரிக்க பணமும் இல்லை,  நேரமும் இல்லை.

அடுத்த தடவை பிஎன் தலைவர்கள் அன்வாரைப் பற்றி பொய் சொல்ல நினைத்தால் மில்லியன் கணக்கில் விரல்கள் அவர்களை நோக்கி நீளும். 

மூங்கில்:  ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்து அது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி என போலீசும் அரசாங்கமும் கூறியது பொய் என்பதை மெய்பித்தது.

மூளையைப் பயன்படுத்துவீர்:  உளவுபார்க்கும் வசதிகளை முழு அளவில் கொண்டுள்ள போலீஸ், குழப்பத்தையும் வன்செயல்களையும் உண்டுபண்ணி அரசாங்கத்தைக் கவிழ்க்கக் கையெறி குண்டுகளுடன் வருகிறார்கள், குழல்குண்டுகள் கொண்டு வருகிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.

அப்படி எதுவும் நடந்ததா?

ஸ்போஞ்ச்பாப்:  இது ஒரு புதிய தொடக்கம். நம் பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் புத்தெழுச்சி பெற்றதைக் கண்டோம். மாணவர்களே, உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.

ஒசாகி ஆனந்தம்: போலீஸ் சொன்னதுபோல் குண்டுகள் வெடிக்கும் வன்செயல் மூளும் என்று என் வெளிநாட்டு நண்பர்களிடம் கூறி வைத்திருந்தேன். மலேசியர்கள் மீண்டும் ஏமாற்றி விட்டார்களே.