ஜோகூரில் டிஏபி-யை வலுப்படுத்துவேன்: லியு சூளுரை

liewடிஏபி-இல் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கும் லியு சின் தோங், ஜோகூரில் எதிரணிக்கு வலுச் சேர்க்க புதிய திட்டத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். இதற்காக அவர் மாநிலக் கட்சித் தேர்தலில்  போட்டி இடுவார்.

நடப்புத் தலைவர் பூ செங் ஹாவ், கட்சி விவகாரங்களில் வெறுப்படைந்தவராக இனியும் தலைவராக இருக்கப்போவதில்லை என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டால் லியு அப்பதவிக்குப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

மலேசியாவில் பிஎன் அரசாங்கத்துக்கு முடிவுகட்டி புதிய ஆட்சி மலர ஜோகூர் முக்கிய போர்க்களமாக விளங்கும் என்று லியு குறிப்பிட்டார்.