டிசம்பர் 31 பேரணியில் கலந்துகொண்டவர்கள் தேசத் துரோகிகள்

muftiபுத்தாண்டுக்கு  முதல்நாள்  டாட்டாரான் மெர்டேகாவில் நடந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் தேசத் துரோகிகள் என பேராக்  முப்தி  ஹருஸ்ஸானி  ஜக்கரியா கூறியுள்ளார்.

பேராணியில் கலந்துகொண்டது ஹராமான செயல் என்றவர் கூறியதாக பெரித்தா ஹரியான் கூறிற்று.

பேரணியில் கலந்துகொண்டவர்களிடம் கண்டிப்புக் குறைவாக நடந்துகொள்ளக்கூடாது என அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு இப்போதே முடிவு கட்டாவிட்டால் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் பரவும் என்றாரவர்.