அல்லாஹ் சொல் தொடர்பில் த ஹெரால்ட் ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

healdசிலாங்கூர்  தேவாலயங்களில் ‘அல்லாஹ்’ என்னும் சொல் பயன்படுத்தப்படுவதன்  தொடர்பில்  த ஹெரால்ட் வார இதழ் ஆசிரியர்  பாதர் லாரன்ஸ் அண்ட்ருவை போலீசார் விசாரணைக்கு அழைப்பர்.

அச்சொல் மாநில தேவாலயங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என அண்ட்ரு கூறியிருப்பதாகச் சொல்லப்படுவது பற்றி சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத்துடனும் ஆலோசனை கலக்கப்படும்  என  சிலாங்கூர் போலீஸ் தலைவர்  ஷுக்ரி டஹ்லான்  தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் ஆன்லைன் அறிவித்துள்ளது.