சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜயிஸ்), மலேசிய பைபிள் கழகத்தில்(பிஎஸ்எம்) அதிரடிச் சோதனை நடத்தி அங்கிருந்த மலாய்மொழி பைபிள்களைப் பறிமுதல் செய்தது.
மலேசியாகினி, பிஎஸ்எம் தலைவர் லீ முன் சூனைத் தொடர்புகொண்டு பேசியபோது இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகள் 16 பெட்டிகளில் இருந்த 321 பைபிள் பிரதிகளை எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.
10 இபான் மொழி பைபிள்களையும் அவர்கள் எடுத்துச் சென்றனர்.
பிற்பகல் 1 மணிக்கு வந்த ஜயிஸ் அதிகாரிகள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர் எனவும் கட்டிடத்தின் முன்வாயில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றனர் எனவும் லீ சொன்னார்.
திருவிளையாட்டில் இது இரண்டாம் படலம்! இன்னும் காட்சிகள் தொடரும். மேற்கத்திய நாட்டுத் தலைவர்கள் வீச்சு வாளைத் தூக்கும் வரை இது தொடரும்.காத்திருங்கள்.
சமயத்துறைக்கும் முரட்டுத்தனத்துக்கும் என்ன சம்பந்தம்? கதவுகளை உடைப்பது திருடர்களின் வேலை. மன்னிக்கவும். இஸ்லாமிய சமயத்தைப்பற்றிய அறிவு எனக்குக் குறைவு.
கத்தி கையில் இருகிறதே என்று தாறுமாறாக உபயோக படுத்தலாமா ?
அரசாங்கம் தன் பக்கம் என்ற இறுமாப்பில் காட்டுமிராண்டித்தனம் செய்கிறார்கள் ! இது அவர்களை சார்ந்த சமயத்திக்கும் அவமதிப்பு , அரசாங்கத்திற்கும் ஆப்பு ! காத்திருங்கள் !!