மரத்தடியில் கல்வி பயிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

1 school 180ஆண்டுக்காலமாக கிளானா ஜெயாவில் செயல்பட்டுவந்த சீபோர்ட் தமிழ்ப்பள்ளி கடந்த மாதம் இழுத்து மூடப்பட்டது. இப்போது அப்பள்ளி அதே பெயரில் சுபாங், கம்போங் லிண்டோங்கில் இயங்கி வருகிறது.

ஆனால்,அது வெகு தொலைவில் இருக்கிறது என்றுகூறி  கிளானா ஜெயா பெற்றோர்  தங்கள் பிள்ளைகளை அங்கு அனுப்ப மறுக்கின்றனர். அப்பள்ளி கிளானா ஜெயாவுக்கே  இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர்.

1schoolஇதனால் பாதிக்கப்பட்டவர்கள் மாணவர்களே. அவர்களுக்கு இப்போது மூடப்பட்ட பள்ளிக்கு வெளியில் உள்ள மரத்தடியே பள்ளியாக விளங்குகிறது. படித்துக் கொடுக்க ஆசிரியர்கள். ஆகையினால், சொந்தமாகவே பயில்கிறார்கள்.

“இந்நிலை தொடருமானால் கிளானா ஜெயாவிலும் லெம்பா சுபாங்கிலும் தமிழ்ப்பள்ளியே இருக்காது”, எனப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் வி.குமார் கூறினார்.

வாழ்க்கைச் செலவினம் அதிகரித்திருப்பதால் 9கி.மீ. தொலைவில் உள்ள புதிய பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்புவதும் திருப்பி அழைத்து வருவதும் குறைந்த வருமானமே பெறும் பெரும்பாலான பெற்றோருக்குச் சிரமமாக இருக்கும் என்றாரவர்.