ஜயிஸ் சுல்தான்கீழ் செயல்படுகிறது, எம்பி-இன்கீழ் அல்ல

expertகிறிஸ்துவ அமைப்பு ஒன்றில்  சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்)  அதிரடிச் சோதனை நடத்திய விவகாரத்தில்  சிலாங்கூர் மந்திரி புசார் தலையிட வேண்டும் என்று  கோரிக்கை  விடுப்பவர்கள் விசயம் அறியாமல் பேசுகிறார்கள்  என்கிறார் சட்ட நிபுணர் ஒருவர்.

ஜயிஸ் மாநில அரசின் கட்டுப்பாட்டில்  இல்லை,  அது சிலாங்கூர்  சுல்தானின்  அதிகாரத்தின்கீழ் உள்ளது என அரசமைப்புச் சட்டப் பேராசிரியர்  அப்துல் அசீஸ் பாரி கூறினார்.

“இஸ்லாமிய விவகாரங்கள்  சுல்தானின் அதிகாரத்துக்கு உட்பட்டவை.  அவை தொடர்பான நடவடிக்கைகளில் அவர் மந்திரி புசாரின் ஆலோசனையைக் கேட்கலாம். கேட்காமலும் செயல்படலாம்”, என்றாரவர்.

நேற்று டமன்சாராவில் , பைபிள் கழகத்தில், ஜயிஸ் அதிரடிச் சோதனை நடத்தி  321 மலாய்மொழி பைபிள்களைப் பறிமுதல் செய்தது குறித்து மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் விளக்க வேண்டும் என்ற கெராகான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங்கின் கோரிக்கைக்கு எதிர்வினையாக அப்துல் அசீஸ் இவ்வாறு  கூறினார்.