கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் டான் சீ இங், நேற்று சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்) அதிகாரிகள் மலேசிய பைபிள் கழகத்தில் நடத்திய அதிரடிச் சோதனையை, “கிறிஸ்துவர்களின் சமய உரிமையில் அதிகாரிகளின் அத்துமீறிய தலையீடு அதிகரித்து வருவதைக் காண்பிக்கும் மற்றுமொரு அத்தியாயம்” என வருணித்தார்.
“இந்தக் கிறுக்குத்தனத்தை ஒருவரால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். அவர்தான் பிரதமர்”, என மலாக்கா-ஜோகூர் மறைமாவட்ட கத்தோலிக்க திருச்சபை தலைவர் கூறினார்.
ஆனால், அவருக்கும் துணிச்சல் இல்லை. அதனால், கடந்த மூன்றாண்டுகளாக இறங்குமுகமாக உள்ள முஸ்லிம்-கிறிஸ்துவர் உறவு மேலும் மோசமடையலாம் என்று கவலைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய உலகமே ஏற்றுக்கொண்ட ஒரு வார்த்தையை வைத்துகொண்டு அரசியல் சதிராட்டம் ஆடுகின்றனர் அம்னோ தரப்பினர். இறங்கு முகம் என்பது அம்னோவுக்குத் தான்.
JAIS க்கும் மற்ற சமயத்திற்கும் என்ன தொடர்பு? JAIS மற்றும் MAIS அவர்தம் சமயத்தையும் அந்த சமயத்தவரையும் கவனித்துக்கொண்டு இருக்கவேண்டுமே ஒழிய அடுத்தவன் சமயத்தில் ஈடுபடவும் அவர்கள் வழிபடும் முறையை கற்றுக்கொடுக்க இவர்கள் யார்?. தனது சமயத்தை சார்ந்தவர்களுக்கு முறையான போதனையை அளித்து அனைவரும் அவரவர் சமய போதனைக்கேற்ப சகோதர உறவில் வாழ்ந்து எல்லோரும் நலமடயாலாமே. நாம் அழிவிற்கு பயன்படுத்தும் அறிவையும் நேரத்தையும் ஆக்கத்திற்கு பயன்படுத்தினால் நாடு முழுவதும் முன்னேறுமே. நாம் வீதியில் பீதியுடன் நடந்து அனைவருடைய மகிழ்வையும் கெடுப்பதைவிட நாம் வீதியிலோ வாகனத்திலோ செல்லும்போது நமக்கு ஏற்படும் அசௌகரியங்களை சமாளிக்க நம்மோடு பயணிப்பவர்கள் எப்போதும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சென்றால் நாடு எப்படியிருக்கும் என்று சிறிது நேரம் சிந்தித்தால் அதுவே நமக்கு மகிழ்வை தருமே. மற்றவர்களிடமிருந்து பிடுங்கி தின்பவதவிட பகிர்ந்துண்ணுவது எவ்வளவோ நன்றானது. நல்லதையே எண்ணி நல்லதையே பேசி நல்லதையே செயல்படுத்தி நலமுடன் வாழ இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.