மரத்தடியில் பயிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

 

Seaport Tamil school1சீ போர்ட் தொடக்க தமிழ்ப்பள்ளியின் சுமார் 20 மாணவர்கள் அப்பள்ளிக்கு அருகிலுள்ள திறந்த வெளியில் மரங்களின் கீழ் அமர்ந்து தாங்களாகவே கல்வி பயில்கின்றனர். இப்பள்ளியை கல்வி இலாகா திடீரென்று கடந்த மாதம் மூடிவிட்டது. இப்பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்று இம்மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.

80 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளியை கல்வி அமைச்சு சுபாங், கம்போங் லிஙண்டுங்கான் என்ற இடத்திலுள்ள புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்துள்ளதை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஏற்க மறுக்கின்றனர். இப்பள்ளிக்கு அதே பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இப்பள்ளி அதிக தூரத்தில் இருப்பதால் மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.

“இப்பள்ளி மாற்றப்பட்டால், கிளானாஜெயாவிலும் லெம்பா சுபாங்கிலும் இனிமேல் தமிழ் தாய் மொழிப்பள்ளிக்கு இடமே இல்லை”, என்று பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வி. குமார் இன்று கூறினார்.

வாழ்க்கைச் செலவீனங்கள் உயர்ந்துள்ளதால், குறைந்த வருமானம் பெறும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை 9 கிலோ மீட்டர்1 school 1 தொலைவிலுள்ள புதிய பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி திரும்பி அழைத்து வருவதற்கான செலவை தாங்கக் கூடிய நிலையில் இல்லை.

புதிய பள்ளிக்கு தங்களுடைய பிள்ளைகளை அனுப்புவதற்கான பள்ளி பேருந்துகள் கிடைப்பதிலுள்ள சிரமத்தையும் பெற்றோர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கிளானாஜெயாவில் அமைந்துள்ள சீ போர்ட் பள்ளி நிலம் சிலாங்கூர் மாநில அரசுக்குச் சொந்தமான சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகத்திற்கு (பிகேஎன்எஸ்) சொந்தமானது என்றும் அந்த நிலம் தனியார் மேம்பாட்டாளருக்கு விற்கப்பட்டு விட்டது என்றும் கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கூறியுள்ளது. ஆனால், பெற்றோர்கள் மேற்கொண்ட ஆய்விலிருந்து அந்த நிலம் இன்னும் பிகேஎன்எஸ்சின் பெயரில் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

இப்பள்ளி வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுவதை பல ஆண்டுகளாக எதிர்த்து வரும் பெற்றோர்கள் இப்பள்ளி இதே இடத்தில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில அரசு தலையிட வேண்டும் என்று கோருகின்றனர்.

பள்ளியின் கட்டடம் பூட்டப்பட்டிருப்பதால், பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அருகிலுள்ள திறந்த வெளியில் பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார வைத்துள்ளனர். ஆசிரியர் எவரும் இல்லை.

எழுத்து மூலம் எதுவும் இல்லை

Seaport Tamil school3பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் என்ற முறையில் தமக்கு இந்த இடமாற்ற திட்டம் குறித்து நவம்பர் 9 இல் தான், மாநில கல்வி இலாகா அதிகாரிகளுடன் நடந்த ஒரு சந்திப்பிற்குப் பின்னர், தெரிவிக்கப்பட்டது என்று குமார் கூறினார். அச்சந்திப்பின்போது, இந்த இடமாற்ற திட்டத்திற்கு தமது எதிர்ப்பை பதிவு செய்ததாக அவர் மேலும் கூறினார்.

“அக்கட்டத்தில், அப்பள்ளியிலேயே தொடர விரும்புவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகள் செய்ய முடியும் என்று அவர்கள் கூறினர். அவர்கள் எனக்கு கடிதம் எழுதுவர் என்றும் கூறினர்”, என்று குமார் தெரிவித்தார்.

ஆனால், இன்று வரையில் எவ்வித கடிதமும் இல்லை. இந்த இடமாற்றம்கூட, பள்ளியின் தலைமை ஆசிரியை திடீரென்று டிசம்பர் 19 இல் என்னை அழைத்து அவர்கள் பள்ளியை இடமாற்றம் செய்கிறார்கள் என்று தெரிவித்தார்”, என்று குமார் மேலும் கூறினார்.

பள்ளி இடமாற்றம் செய்யப்படுவதற்கான காரணம் என்ன என்று பெற்றோர்கள் அமைச்சிடமிருந்து கடிதம் மூலம் எந்த உறுதிப்படுத்துதலையும் பெறவில்லை.

இன்று அப்பள்ளிக்கு வருகையளித்த பிகேஆர் கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் சிலாங்கூர் மாநிலSeaport Tamil school4 அரசிடமிருந்து பதில்களைப் பெறுவதற்கு அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு தாம் உதவப் போவதாக கூறினார்.

“இக்குடியிருப்பாளர்களுக்கு மாநில அரசு எவ்வித பதிலும் அளிக்காமல் இருப்பது முறையல்ல. இது தவறான தகவல் பரிமாற்றத்தின் விளவு என்று நான் கருதுகிறேன். இப்பிரச்சனையை உயிரோட்டத்துடன் வைத்திருப்பது முக்கியமானதாகும்”, என்று அவர் சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்திற்கு 2012 ஆம் ஆண்டிலிருந்து பல கையொப்பமிட்ட வேண்டுகோள்கள் அனுப்பப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி கூறினார்.

தமக்கு இவ்விவகாரம் குறித்து அண்மையில்தான் தெரிவிக்கப்பட்டிருப்பதால், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு இது சம்பந்தப்பட்ட விபரத்தை முற்றாக தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்று வோங் மேலும் கூறினார்.