விலை உயர்வுகளைக் கருத்தில் அரசாங்கச் செலவுகளைக் குறைக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். 11 நடவடிக்கைகளை அறிவித்திருந்தாலும் உணவகங்கள், சிறுகடைகள் போன்றவற்றை வைத்திருப்பவர்கள் அதனால் கவரப்படவில்லை.
மலேசியாகினி, கோலாலும்பூர், பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் அங்காடி வியாபாரிகள், ஸ்டால் கடைகள், உணவக உரிமையாளர்கள் போன்றோரைச் சந்தித்துப் பேசியதில் அவர்களில் பலர் ஜனவரி 31 சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் விலைகளை உயர்த்துவது பற்றி ஆலோசித்து வருவதை அறிய முடிந்தது.
அவர்கள் செலவினத்தைக் குறைக்கும் அரசாங்க நடவடிக்கைகளால் ஆகப் போவது என்னவென்றும் வினவினார். “அவற்றால் எனக்கு என்ன ஆதாயம்”, என்றவர்கள் கேட்டனர்.
பயனீட்டாளர் ஒருவர் செராசில் பண்டார் மக்கோத்தா, சுங்கை லோங் ஆகிய இடங்களில் உள்ள உணவுப் பூங்காக்களில் உணவுபொருள்களுக்கு 50சென்னும் பானங்களுக்கு 10-இலிருந்து 20சென் வரையிலும் விலையை ஏற்கனவே உயர்த்தி விட்டார்கள் என்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
நஜிபின் செலவுகளை குறைத்தா போதுமா..? எல்லா அமைச்சர்களும் குறைக்கனும் அதோடு முக்கியமா சிறப்பு தூதர் அமைச்சருனு தெண்டத்துக்கு மூன்று பேருக்கு சம்பளம் கொடுக்கிறாங்களே அதை எல்லாம் உடனடியாக நிறுத்தனும் அரசு செய்யுமா..?