மலேசியாகினியின் கட்டிட நிதிக்கு ‘செங்கல் வாங்குவீர்’ திட்டத்தின்வழி சேர்ந்துள்ள பணம் 2014, ஜனவரி முதல்நாள் ரிம 1மில்லியனைத் தாண்டியது.
“ஒரு மில்லியனை எட்டிப் பிடித்ததை எண்ணி மகிழ்கிறோம். இது வாசகர்களும் ஆதரவாளர்களும் அளித்துள்ள புத்தாண்டு பரிசு”, என மலேசியாகினி செய்தித்தளத்தின் தலைமை செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரன் கூறினார்.
ஜனவரி 15-இல், நிதி திரட்டும் இயக்கத்தை முடித்துக்கொள்ள முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அது தொடரும் எனத் தெரிகிறது.
“ஆயிரம் பேர் செங்கல் வாங்கி ஆதரவு தரும்வரை அந்த இயக்கத்தைத் தொடர்வோம். இப்போதைய வேகத்தில் பிப்ரவரியில் அந்த இலக்கை அடைந்து விடுவோம்”, என்றாரவர்.
பெட்டாலிங் ஜெயாவில், புதிய கட்டிடம் வாங்குவதற்கு ரிம3 மில்லியன் திரட்டுவது மலேசியாகினியின் நோக்கமாகும்.
மகிழ்ச்சியான செய்தி என்றாலும் மலேசியாகினியின் கை கால்களை வெட்ட ஒரு கூட்டம் தயாராக இருக்கிறதே! அனைத்தையும் மீறி வெற்றி பெரும் என நம்புவோம்!
அந்த செங்கல் வாங்குவதில் செம்பருத்தி என்ற தமிழ் பகுதிக்கு மாபெரும் இடம் இருக்கும் என்று நம்புகிறேன் .