மஸ்லான்: இவ்வளவு கடுமையான எதிர்ப்பு தேவையில்லை

ahmad maslanஉலகில் எந்த நாட்டையும்விட மலேசியாவே மக்களுக்கு  நன்மை செய்யும் திட்டங்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடு என்பதால்  விலை உயர்வுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தேவையற்றவை என்று கூறுகிறார் நிதி துணை  அமைச்சர் அஹ்மட்  மஸ்லான்.

பெட்ரோல், சீனி, மின்கட்டணம் என  மூன்று மட்டுமே விலை உயர்வைக் கண்டுள்ளன. மறுபுறம், கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு என மக்களுக்கு நலம்பயக்கும்  10 வகையான திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது என்றாரவர்.

“இவ்வளவு கடுமையாக எதிர்ப்பைக் காண்பிக்க வேண்டியதில்லை. அது நியாயமல்ல”, என அஹ்மட் மஸ்லான்(படத்தில் வலம் இருப்பவர்) கூறினார்.