முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தத் தடை விதித்தது அதன் விளைவாக மலேசிய பைபிள் கழகத்தில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது எல்லாமே அரசியல் நோக்கம் கொண்ட செயல்கள் என பாஸ் கூறியது.
சமயத்தைப் பாதுகாப்பது என்றால் அதை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர மற்றவர்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது என்று பாஸ் உதவித் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் குறிப்பிட்டார்.
முஸ்லிம்-அல்லாதார் முஸ்லிம்களுக்கு உரிய சொற்களைப் பயன்படுத்த இடமளித்தால் முஸ்லிம்கள் சமயத்தைக் கைவிடும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
“இந்நாட்டில் முஸ்லிம்களின் சமய நம்பிக்கை அந்த அளவுக்கா பலவீனமாக உள்ளது?”, என்று பலராலும் மதிக்கப்படும் அந்தச் சமய அறிஞர் வினவினார்.
இதுதான் இறைவனை நம்பும் உண்மையான ஒவ்வொரு மனிதனும் சொல்லும் உண்மையான வார்த்தை இது. வாழ்க வளமுடன்.
எங்க தலைவா….இந்தியர்கள் தான் தெருவுக்கு ஒரு சாய் மார்களை ….oppps ,…தெருவுக்கு ஒரு குரு மார்க்கத்தை வழிபட்டு திணறி போயி இருக்கானுகளே ……இதுலே எங்க இவனுங்க சமயத்தை பாதுகாக்க போறானுங்க ….ஓம் சாய் பொய் நாய் பேய் நமக…. சுவாக ….
துவான் ஹாஜி நீங்க சொல்வதுதான் சரி. சமய கட்சியான பாஸ் சும்மா இருக்குது. அம்நோக்காரந்தான் இப்ப எகிறி குதிக்கிறான்..? இதுவெல்லாம் அரசின் ஏற்பாடு..?
நியாயமான பேச்சு…..நன்றி!
நல்லா அந்த மர மண்டைகளுக்கு உரைக்கற மாதிரி சொன்னிங்க நன்றி .
அவர் சொல்வது மிக சரியான வார்த்தை . அதே போல் நாமும் நம் சமயத்தை நன்கு படித்து அறிவோம். முறையான வழிபாடு என்ன என்பதை அறிந்து அதன் படி நடப்போம். குரு அருள் வேண்டும் ஆனால் மூடதனம் வேண்டாம் . நமது முறையான குருமார்கள் , நம் சமயத்துக்காக பாடுபட்டவர்கள் நிறைய உண்டு. அதை நன்கு அறிந்து அதன்படி நடப்போம். இப்பொழுது பணத்துக்காக பல குருமார்களும் ஞானிகளும் நாளுக்குநாள் தெருவுக்கு தெரு உருவாகிகொண்டிருக்கார்கள் . மற்ற மதத்தினர் நமை பார்த்து கேலி செய்யுமாறு நடக்கவேண்டாம் . நம் முன்னோர்கள் இந்த மாதிரி குருமார்களுக்கு அடிமை பட்டதல்ல . நாமும் முறையான வழிபாட்டையும் நமது சமயத்தையும் பல அறிஞர்களிடம் கற்று தெரிந்துகொள்வோம் . நம் மதத்தை சரியாக தெரியாமல் தான் நிறைய குழப்பம் ஏற்படுகிறது .
பெரும்பாலான முஸ்லிம்களின் சமய நம்பிக்கை தங்களது உள்ளத்திலிருந்து வரவில்லை, உதட்டிலிருந்து வருகிறது. அரசாங்கத்தின் கட்டாயத்தின் பேரில் வருகிறது. உள்ளத்திலிருந்து வரும் அளவுக்கு அவர்களின் சமய வகுப்புக்கள் அவர்களின் மனதைப் பண் படுத்தவில்லை. மற்ற சமயத்தினர், குறிப்பாக கிறிஸ்துவ சமயத்தினர், அந்தப் பலவீனத்தைப் பயன் படுத்திக் கொள்ளுவரோ என்னும் பயம் அவர்களிடையே உள்ளது. அதனால் தான் கடுமையான சட்டங்களை அவர்கள் பயன் படுத்துகின்றனர். ஆனால் இதுவரை ஒரு முஸ்லிம் கூட கிறிஸ்துவராக மாற முடியவில்லை. நிறைய கிறிஸ்துவர்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இருந்தும் கிறிஸ்துவர்களைப் பற்றிய அவர்களின் பயம் அப்படியே இருக்கிறது!
மதம் ஒரு வழி காட்டி ஆகா அவரவர் விருப்படிதன் அது இருக்க வேண்டுமே தவிர கட்டாயத்தின் பேரில் அல்ல! அன்பே சிவம்!
ஆபத்து! ஆபத்து அல்…வுக்கு ஆபத்து!காப்பாற்றுங்கள் எங்கள் அல்…வை!
தமிழன் நீலாய் சொல்வது நியாயமானது. சாய் மையத்தைத் திறந்து பிழைப்பு நடத்தும் அளவுக்கு நிலைமை உள்ளது. சமயமாவது வெங்காயமாவது..
நான் இதை மனமார ஏற்கிறேன்