அதிரடிச் சோதனை ஒரு திசைதிருப்பும் நடவடிக்கையா?

bible raidமலேசிய பைபிள் கழகம் (பிஎஸ்எம்) மீது அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது,  டிசம்பர் 31 விலை உயர்வு-எதிர்ப்புப் பேரணியிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் ஒரு தந்திரமா?

அது  சிலாங்கூர்  அரசுக்கும் தெரியாமல்   மேற்கொள்ளப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது என மனித உரிமைக்காக போராடும் என்ஜிஓ-வான சுவாராம் ஒரு அறிக்கையில் கூறியது. 

பேரணியைத் தொடர்ந்து  விலை உயர்வுகள்மீது அனைவரின் கவனமும் பதிந்திருந்த வேளையில் அதிரடிச் சோதனை அதை மாற்றியது. இப்போது அனைவரும்  கிறிஸ்துவர்கள் அவர்களின்  புனித நூல்களில்  ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தப்படுவது பற்றிப் பேசுகிறார்கள் என சுவாராம் செயல்முறை இயக்குனர் யாப் சுவி செங் கூறினார். 

சிலாங்கூர் அரசுக்குக்கூட தெரிவிக்காமல் அந்த அதிரடிச் சோதனையை நடத்திய  சிலாங்கூர்  இஸ்லாமிய  துறையை (ஜயிஸ்) அவர் சாடினார்.

“பொறுப்பை மறந்து நடந்துகொண்டதற்காக ஜயிஸ் இயக்குனர் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்”, என்றாரவர்.