ஊழலை எதிர்க்க ஒரு புதிய மையம்- Centre to Combat Corruption and Cronyism (சுருக்கமாக C4) ஜனவரி 16-இல் தோற்றம் பெறுகிறது. சமூக ஆர்வலர்கள் பலர் சேர்ந்து அதை அமைக்கிறார்கள்.
C4 மையத்தைப் பிரதிநிதித்துப் பேசிய அதன் இயக்குனர் சிந்தியா கேப்ரியல் சிலாங்கூரில் அது தோற்றுவிக்கப்படுவதாகக் கூறினார். அதன் திட்டங்கள் போகப்போகத் தெரியவரும் என்றாரவர்.
அம்மையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டும் பலரில், ட்ரேன்பேரன்ஸி இண்டர்நேசனல் முன்னாள் இயக்குனர் ரிச்சர்ட் இயோ, முன்னாள் சுஹாகாம் ஆணையர் சைமன் சிபான், இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணி தலைவர் அஹ்மட் பாருக் மூசா ஆகிய மூவரும் முக்கியமானவர்கள்.
எதிர்க்கத்தான் முடியும் ஆனால் தடுக்க முடியாது ,எல்லாமே உடன் பிறந்தவை இந்த BN காரர்களுக்கு
இதுவும் அரசாங்கத்தைக் கவிழ்க்க எதிர்கட்சியினரின் சதி என்று காவல் துறையின் அறிக்கை விரைவில் வரும்!
இது போன்ற அழுத்தம் தரும் அரசு சார்பற்ற இயக்கங்கள் உருவாகவேண்டும்.
ஊழல் என்று வரும்பொழுது ஏன் அதிகமான மலாய்காரர் அல்லாதவர் மட்டுமே முன்வருகின்றார்கள் ? மலாய்காரர்களுக்கு ஊழலின் பாதிப்பு இன்னும் தெரியவில்லையோ ?
c 4 வா.. அல்தான்துயா ஞாபகம் வருதே..
அம்னோ அரசாங்கம் நாட்டை ஆளும் வரை C4 என்ன C40 அமைத்தால் கூட ஊழலை அழிக்க முடியாது. மகா தீரர் காலத்தில் தானே ஊழ்ல் வலுப்பெற்றது. ஒரு கிலோ மெட்டிரிக்கொ பேனா 2.50 ரிங்கிட்டுக்கு வாங்கப் பட்டதை முன்னால் அமைச்சர் ஒருவர் அம்பலப் படுத்தினார்.ஆனால் இதுவரை சம்பத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதா? இல்லை. காரணம் அம்னோ அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!