தேவாலயங்களுக்குமுன் ஆர்ப்பாட்டம் செய்யும் அம்னோவின் திட்டத்துக்குத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஆதரவு தெரிவித்திருப்பதை பிரதமர் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும்.
“பிரதமர் என்ற முறையில் நஜிப் அப்துல் ரசாக், நாட்டில் இன, சமய இணக்கநிலையை உறுதிப்படுத்த வேண்டும்”, என டிஏபி தேசிய உதவித் தலைவர் தெரெசா கொக் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் தேவாலயங்கள்முன், குறிப்பாக கிள்ளானில், ஆர்ப்பாட்டம் செய்யும் மாநில அம்னோவின் திட்டம் குறித்து பிரதமர் மவுனம் சாதிப்பது பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
“தேவாலயங்கள்முன் ஆர்ப்பாட்டம் செய்யும் சிலாங்கூர் அம்னோவின் திட்டத்தை ஆதரிக்கும் துணைப் பிரதமரையும் அவர் கண்டிக்க வேண்டும்.
“துணைப் பிரதமரான முகைதின் எப்படி இவ்வளவு பொறுப்பற்றவராக இருக்கிறார்?”, எனவும் சிபூத்தே எம்பி வினவினார்.
இவன் ஒரு பிரதமரா , அட ச்சிசிசி!!!
தேவாலய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை எவன் நடத்தினாலும்….இருக்குங்கடா………….!!!
விலைவாசி ஏற்றத்தைத் திசைத் திருப்ப இந்தத் தேவாலைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அம்னோவுக்குத் தேவைப்படுகிறது! துணைப்பிரதமர் பெரிய ஹீரோவாகப் பார்க்கிறார்!
இவர் பிரதமர் ஆவதற்கு நாட்டையே தீயிலிடவும் தயார். ஒரு துணைப் பிரதமர் பேசக்கூடாதவைகளை, சட்டத்திற்கு புறம்பானவைகளை, எவ்வித நன்னெரியுமின்றி மற்றொரு மஹாதீராக கக்கிக்கொண்டு இருக்கிறார்…! வெட்கம் சிறிதும் அறியா இழி சென்மம்.
பலே… சக்கிரவர்த்தி… பலே..! அம்னோ அரசியலின் சதியை அழகாக சொல்லிவிட்டீர்! அம்னோவின் அரசியல் விளையாட்டு எப்போதுமே இப்படித்தான்! இதை எதிர்தரப்பு புரிந்து சாதுரியமாக காய்களைச் சட்டத்திற்குள்ளாக நகர்த்தப் பழகவேண்டும். அணையப்போகும் அம்னோ எனும் விளக்கு சுடர்விட்டு பிரகாசிக்கிறது .அவ்வளவுதான்!
MOHAN mohan அவர்களே உங்கள் வேதனையை நான் அறிவேன். கவலை வேண்டாம். இவர்களை உசிப்பி விட்டவர்களேயே இது திரும்பி தாக்கும். நாம் வரலாற்றில் பார்த்திருக்கிறோம் ஒரு சாரார் மற்றவர்க்கு எதிராக ஏவி விட்டவைகள் ஏவி விட்டவரையே இறுதியில் தாக்கியதை. எதயோ பிடிக்கப்போய் ஏதோ ஆன கதையாகிவிடும். அதன் பிறகு இவர்களை அடக்கமுடியாமல் குத்துதே கொடையுதே என்று புலம்புவார்கள். பாலை வார்த்து வளர்த்த பாம்பு வளர்த்தவனையே கொன்றதை கண்டும் கேட்டும் இருக்கிறோம். செழிப்பான நாட்டுக்கு பிரதமராவதுதான் சிறப்பே ஒழிய சீரழிந்த நாட்டுக்கா பிரதமராவது. பதவிக்கு விரும்பும் எவரும் சிந்திக்கவேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் ஆழ்ந்து சிந்தித்து செயல்பட இறைவனிடம் மன்றாடுவோம். இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
umno அரசியல் மலைய்காரங்கள் இனவெறி பிடித்து அலையறானுங்க இவன்கள் மற்ற இனத்துக்கு எங்கே மதிப்பு கொடுப்பான்கள்.
மைடினை எரிகிற நெருப்பில் பெர்ரோளை ஊத்தச்சொன்னால் சிறப்பா செய்வான் இவனுக்கு முதல் பரிசுக்கு சிபாரிசு செயியலாம் !
முகைதினைப்போன்ற மடையர்கள் அம்னோவில் பலர் இருக்கின்றனர். ஆனாலும் MIC -MCA கம்மனாட்டிகளில்னால் தான் இவ்வளவு பிரச்சனைகள். இவன்கள் விட்டு கொடுத்ததினால்தான் இன்று நாம் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம்
romeo, மிகவும் சரி. கடந்த காலங்களில் BNனின் மற்ற பங்காளி கட்சிகளின் தலைவர்கள் செய்த சுயநலம் பேணும் மிகப்பெரிய தவறினால், தீர்க்கதரிசனம் இன்மையால் இன்று நாம் மீண்டும் மேலே ஏறிவர மிக2 சிரமப்படும் மிக2 ஆழமான குழியில் தள்ளப்பட்டு உள்ளோம். இப்பொழுது உள்ள தலைவர்களும் தங்களின் சுயநலத்தை மட்டும் பேணி அதே பாதகத்தை செய்து, நாமின்னும் மேலும் கீழே தள்ளப்பட umNoBவிற்கு உதவிகரம் நீட்டுகின்றனர். சுயமாக உழைத்து 4 காசு சம்பாதிக்க வக்கற்றவர்கள்போல் அரசாங்கம் வீசும் எலும்புகளுக்காக இப்படி செய்கின்றனர். .
உங்கள் பேச்சைக் கேட்டு இவர் இந்த தறுதலைகளை கண்டித்தால் இவரது பதவிக்கு No 2 ஆப்புவைக்க வழி வகுத்து விடும் என்ற பயம். மேலும் இவருக்கும் இதுபோன்றவற்றில் எந்த பங்கும் இருக்காது என நம்புவது கடினம். பெர்காசவுக்கே அது உயிர்வாழ அரசாங்க மானியம் கொடுப்பவர் ஆயிற்றே..!!